1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu summer weather status today

இன்று தொடங்கிய அக்கினி வெயில்! – 8 மாவட்டங்களில் சதம் போட்ட வெயில்!

Tamilnadu
இன்று தமிழ்நாட்டில் அக்கினி வெயில் காலம் தொடங்கிய நிலையில் 8 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.

இந்தியா முழுவதும் கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் பல பகுதிகளில் வெயில் அதிகமாக மக்களை வாட்டி வருகிறது. அதிகமான வெயிலை கருத்தில் கொண்டு பல மாநிலங்களில் பள்ளி செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வரும் நிலையில் இன்று முதல் அக்கினி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. இதனால் வெயில் அதிக அளவில் வீசும் என்பதால் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே நடமாடுவதை மக்கள் குறைக்க வேண்டும் என வல்லுனர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

அக்கினி வெயில் தொடங்கியுள்ள இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை சராசரியாக 100 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது.

தர்மபுரி, கரூர், சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட் முதல் 99 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகியுள்ளன.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஷவர்மா சாப்பிட்ட மாணவி இறப்புக்கு என்ன காரணம்? பிரேத பரிசோதனை தகவல்