செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 25 நவம்பர் 2018 (15:28 IST)

திமுக கூட்டணியில் மதிமுக, விசிக இல்லை: துரைமுருகன் அறிவிப்பால் பரபரப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்காமல் ஓயமாட்டோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஒருபக்கம் சூளுரைத்து வருகிறார். இன்னொரு பக்கம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், முக ஸ்டாலின் பிரதமர் ஆகக்கூடிய வாய்ப்பும் உள்ளது என்று கூறி வருகிறார்.

ஆனால் திமுக பொருளாளர் துரைமுருகன், கொள்கை அளவில் ஒத்துப்போவது வேறு, தேர்தல் கூட்டணி என்பது வேறு எனவே இப்போதைக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக உள்பட எந்த கட்சியும் இல்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் தேதி அறிவித்த பின்னர் எங்களுடன் கூட்டணி சேரவுள்ள கட்சிகளின் தலைவர்களுடன் உட்கார்ந்து பேசி, தொகுதி உடன்பாடு வந்த பின்னரே கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கின்றது என்பதை உறுதி சொல்ல முடியும் என்றும், இப்போதைக்கு காங்கிரஸ், மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் திமுகவுடன் கொள்கை அளவில் ஒத்துப்போயிருந்தாலும் அவை கூட்டணியில் இருப்பதாக அர்த்தம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் கூட்டணி குறித்து துரைமுருகன் கூறிய கருத்தை தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும், திமுக - காங்கிரஸ் கூட்டணி புதுச்சேரியில் இருப்பது போன்று தமிழகத்திலும் வலுவாக உள்ளது என்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்  திருநாவுக்கரசர்
தெரிவித்துள்ளார்.