தொடர்புடைய செய்திகள்
- கஜாவில் பிறந்த பாப்பாவுக்கு கஜஸ்ரீ என பெயரிட்ட பெற்றோர்
- மாஸ்டர் பிளான் போட்டு தான் ஹெலிகாப்டரில் போனேன்: எடப்பாடியாரின் புது விளக்கம்
- பாதிக்கப்பட்டோரின் தேவைகளை உணர்ந்து உதவிய நடிகை கஸ்தூரி!
- இதை செஞ்சாலே போதுமே! புயலால் பாதித்த விவசாயிகளை காக்க ஜிவி கொடுத்த சூப்பர் ஐடியா
- பிரதமருக்கு தமிழ்நாடு என்ற இருப்பதே தெரியவில்லை: துரைமுருகன் பாய்ச்சல்
திமுக-மதிமுக இடையே விரிசலை ஏற்படுத்தியதா கஜா?
கஜா புயலினால் டெல்டா பகுதி மக்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்களுக்கு விரிசலை ஏற்படுத்தியது போல திமுக மற்றும் மதிமுகவுக்கும் இடையிலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கஜா புயல் நிவாரண பணியை சரிவர தமிழக அரசு செயல்படவில்லை என்றும், மத்திய அரசிடம் இருந்து நிதியை பெறுவதில் சுணக்கம் காட்டி வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று முதல்வர் பார்வையிடவில்லை என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார்.
ஆனால் திமுக தலைவர் மு,க.ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சூளுரைத்து வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 'கஜா புயல் நிவாரணப் பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், சீரமைப்பு பணிகளில் அரசு அதிகாரிகள் மற்றும் மின் ஊழியர்கள் மிகச்சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் நிவாரண பணிகள் குறித்து மாறுபட்ட கருத்துக்களை வைகோவும், ஸ்டாலினும் தெரிவித்திருப்பது இரு கட்சிகளின் உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
