1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Stalin criticized Chief Minister Oommen Chandy

முதல்வர் எடப்பாடியை விமர்சித்த ஸ்டாலின் ...

Stalin
கஜா புயாலால் தமிழக வரலாற்றில் டெல்டா மாவட்ட விவசாயிகளை பெருமளவில் பாதித்துள்ளது கஜா புயல். ஏராளமான மக்கள் தன் வீடுகளை, சொத்துக்களை இழந்து பரிதாபமாக நிற்கிறார்கள் .இந்நிலையில் தமிழக அரசு இன்னும் சிறப்பாக செயல்பட்டு மக்களின் நலன் பேண் வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது :
 
சில தினங்களுக்குமுன்பு வந்த கஜா புயலால் இதுவரை  8 மாவட்டங்கள் கடுமையாக பாதித்துள்ளன. மக்களுக்கு சாதாரண உதவி கூட செய்ய இயலாததாக உள்ளது எடப்பாடி அரசு . மக்களி நேரில் சந்திக்காமல் உள்ளார். இப்படி மக்களை நேரில் சந்திக்காமல் அவர்களின் கஷ்டம் எப்படி அவருக்கு தெரியும்?
 
மக்களுக்கு உரிய உதவிகள் செய்யாததால் தான் காரில் செல்லாமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார்.
 
இதற்காக மக்களிடம் அவர் கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
கஜா பாதிப்பு: நெகிழ வைத்த மனித நேயம்: நிரூபித்த தஞ்சை ஹோட்டல் உரிமையாளர்