1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Maternity allowance for construction workers' welfare board hiked

மகப்பேறு உதவித்தொகை ரூ6,000 லிருந்து ரூ18,000 ஆக உயர்வு: அமைச்சர் அறிவிப்பு

money
கட்டுமான தொழிலாளர் நல வாரிய பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு உதவித்தொகை ரூ6,000 லிருந்து ரூ18,000 ஆக உயர்த்தப்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்  அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 
மேலும் விபத்தில் சிக்கிய கட்டுமான தொழிலாளர்களுக்கான உதவித்தொகை ஒரு லட்சத்தில் இருந்து ரூ2 லட்சமாக உயர்வு எனவும் இன்று சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு செய்துள்ளார்.
 
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்களின் இந்த அறிவிப்பை அடுத்து கட்டுமான தொழிலாளர் நல வாரிய பெண் தொழிலாளர்கள் தங்களது நன்றியை தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளனர்.
 
 
அடுத்த கட்டுரையில்
டெல்லி எய்ம்ஸ் வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் நடத்த தடை: அதிரடி உத்தரவு