செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 11 மே 2022 (18:10 IST)

டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுபவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு

Face Mask
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
வரும் 21ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி  குரூப் 2, 2ஏ தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் முகக்கவசம் அணியாத விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஹால்டிக்கெட்டில் உள்ள முகத்தை சரி பார்க்கும் போது மட்டும் முகக்கவசத்தை அகற்ற வேண்டும் என்றும், அதன் பின் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது
 
மேலும் தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் செல்போன் ,ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை கொண்டு வரக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது