1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 11 மே 2022 (18:01 IST)

ஆசிரியர்களுக்கும் ஈட்டிய விடுப்பு ரத்து: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

teachers
ஆசிரியர்களுக்கும் ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளதால் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் அரசுப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு 15 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த 15 நாட்களை விடுமுறை எடுக்காமல், அந்நாட்களில் பணிக்கு ஆசிரியர்கள் வந்திருந்தால் அதற்கான ஊதியத் தொகையை பணமாக கொடுக்கப்படும் நடைமுறை இதுவரை  இருந்தது 
 
இந்நிலையில் கடந்த மாதம் அதாவது ஏப்ரல் 11-ம் தேதி முதல் ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.