1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Kadukkai gives relief from stomach aches !!

வயிற்று பிணிகளை போக்கி நிவாரணம் தரும் கடுக்காய் !!

கடுக்காய்
கடுக்காயில் மலமிளக்கிய பண்புகள் உள்ளன. இரவு தூங்குவதற்கு முன்பு கடுகாய் பொடியை ஒரு டம்ளர் சூடான நீரில் கலந்து குடித்தால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அஜீரணம், அமிலத்தன்மை போன்ற பல வயிற்றுப் பிரச்சினைகளிலிருந்து உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.


15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு தம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும். கடுக்காய் வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும் வல்லமை பெற்றது.

கடுக்காய் பசியைத் தூண்டும். செரிமானதை அதிகரிக்கும். 10 கிராம் கடுக்காய் பொடியை எடுத்து, அதே அளவு சுக்கு, திப்பிலி இரண்டு தூள்களையும் கலந்து காலை, மாலை சாப்பிட்டால் வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். ஒரு டீஸ்பூன் கடுக்காய் பொடியை சூடான நீரில் கலந்து. தாங்கக்கூடிய வெப்பநிலைக்கு வந்ததும், குடிக்க வேண்டும். தொண்டை புண் குணமாகும். மேலும் ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க கடுக்காய் உதவுகிறது. நீரிழிவு நோய்க்கான மருந்துகளை ஏற்கனவே நீங்கள் எடுத்துக்கொண்டிருந்தால் மருத்துவரிடம் கேட்டு எடுத்து கொள்ளலாம்.

கடுக்காய் சருமத்தை சுத்தப்படுத்தும். இது உங்கள் உடலின் நச்சுகளை அகற்றும் என்பதால், கடுக்காய்பொடியை உட்கொள்வதால் உங்கள் சருமத்தை சுத்தப்படுத்தும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
அன்றாட உணவில் அவசியம் சேர்க்கவேண்டியவை இவை தான் !