செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 ஜூன் 2020 (11:37 IST)

பாதி பேர் தேர்வுக்கே வரலை; எப்படி மார்க் போடுவது? குழம்பும் ஆசிரியர்கள்!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் முந்தைய தேர்வுகளை பல மாணவர்கள் சரியாக எழுதவில்லை என அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவருக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பல தனியார் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டதால் தற்போது மதிப்பெண் பதிவு பட்டியல் மட்டுமே உள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்கு ஆர்வம் கொடுத்து எழுதாததால் பாதிக்கும் மேற்பட்டோர் தேர்வை ஒழுங்காக எழுதாமல் ஃபெயில் ஆகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களுக்கு எப்படி மதிப்பெண் அளிப்பது என்று புரியாமல் ஆசிரியர்கள் குழம்பி போயுள்ளனர். இதுதவிர சிலர் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் சிலவற்றை எழுதாமல் விடுப்பு  எடுத்துள்ளனர். அவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் அளிப்பது என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.