செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 ஜூன் 2020 (08:19 IST)

ரஜினிக்கு மிரட்டல் விடுத்த 14 வயது சிறுவன்! – பகீர் தகவல்!

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுத்தது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அதை செய்தது 14 வயது சிறுவன் என தெரிய வந்துள்ளது.

நேற்று இரவு 108 அவசர எண்ணிற்கு அழைப்பு விடுத்த மர்ம நபர் நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிக்குண்டு இருப்பதாக கூறியுள்ளார். அதை தொடர்ந்து உடனடி நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் அந்த தகவல் வெறும் புறளி என்பதை கண்டறிந்தனர்.

108க்கு போன் செய்து மிரட்டல் விடுத்தது யார் என போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டியது கடலூரை சேர்ந்த 14 வயது சிறுவன் என தெரிய வந்துள்ளது. 8ம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிய வந்துள்ளது, அதை தொடர்ந்து போலீஸார் சிறுவனின் பெற்றோரிடம் அறிவுரை கூறியுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.