செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 ஜூன் 2020 (08:39 IST)

12 நாட்கள் தாக்கு பிடிக்கணும், மொத்தமா வாங்கிக்கலாம்! – கல்லாக்கட்டிய டாஸ்மாக்!

சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் விற்பனஒ இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் மற்ற பகுதிகளை காட்டிலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால் இன்று முதல் 30ம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அப்பகுதிகளில் அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் அனைத்து பகுதிகளும் பிரிக்கப்பட்டு பலத்த காவலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து 12 நாட்கள் ஊரடங்கு என்பதால் மதுக்கடைகளும் திறக்கப்படாது என்பதால் நேற்று காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய முழு ஊரடங்கு பகுதிகளில் உள்ள அனைத்து டாஸ்மாக்குகளும் கூட்டமாக காணப்பட்டுள்ளது. மது பிரியர்கள் பலர் 12 நாட்களுக்கு தேவையான மது பாட்டில்களை ஒரே மூச்சாக வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள 300 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளின் சராசரி வியாபாரம் 18 கோடியாக இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 36 கோடியாக விற்பனை இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.