வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 7 ஜனவரி 2021 (16:43 IST)

பல பெற்றோர்களின் கோரிக்கை....ஜனவரி 18 முதல் பள்ளிகள் திறப்பு ???

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்தாலும் தினமும்  சிலநூறு பேருக்கு கொரோனா தொற்றும் இறப்பும் நடந்துகொண்டே உள்ளன. இந்நிலையில் இதைக்குறைக்க தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் வரும் ஜனவரி 18 முதல்  பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதகத் தகவல் வெளியாகிறது.

கடந்த மார்ச்சில் கொரோனா தொற்றுப் பரவல் இந்தியாவில் அதிகமாகப் பரவவே நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையத்து, பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஆன்லைன் வாயிலாகக் கற்பித்தல் நடத்தப்பட்டன. இப்போதும் சில நடந்து வருகின்றன.

இந்நிலையில் 10 மற்றும் 12 வது படிக்கும் மாணவர்களின் பெற்றோர் சுமார் 70% பள்ளிகளைத் திறக்க வேண்டுமென கருத்துக்கேட்புக் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாப் பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

எனவே மாணவர்களின் பொதுத்தேர்வைக் கருத்தில் கொண்டு  வரும் ஜனவரி 18 முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

மேலும்  ஆன்லைன் வாயிலாகப் பொதுத்தேர்வு நடத்துவது பலன் தராது என பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளதாகவும்  தெரிகிறது.