1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 6 ஜனவரி 2021 (07:49 IST)

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா? இன்றும் நாளையும் பெற்றோரிடம் கருத்து கேட்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் முதல் பரவிவரும் நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதில் இருந்து பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை. கிட்டத்தட்ட 9 மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டு ஜீரோ கல்வி ஆண்டாக மாறிவிடக்கூடாது என்பதற்காக விரைவில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர் 
 
இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறக்கலாமா என்பது குறித்து இன்றும் நாளையும் பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பெற்றோர்களின் கருத்துக்களின் அடிப்படையில் பள்ளி கல்வித்துறை அறிக்கை தயாரித்து முதல்வரிடம் அளிக்கும் என்றும் முதல்வர் இது குறித்து முடிவு செய்வார் என்றும் கூறப்படுகிறது 
 
பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பது குறித்த இந்த கருத்துக் கணிப்பு எடுத்து முடித்தவுடன் முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கல்வி ஆண்டில் ஒரு சில மாதங்களாவது பள்ளிகள் திறக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது திரையரங்குகள் உள்பட அனைத்தையும் திறந்த பிறகு பள்ளிகளை மட்டும் மூடுவது ஏன் என்ற கேள்வியும் சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது