1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : சனி, 7 பிப்ரவரி 2026 (10:45 IST)

இன்னும் 15 நிமிடத்தில் வந்துவிடுவேன்.. பெற்றோர் திருமணநாள் விழாவுக்கு பைக்கில் வந்த இளைஞர்.. கடைசி வரை வரவில்லை.. பெரும் சோகம்..!

இன்னும் 15 நிமிடத்தில் வந்துவிடுவேன்.. பெற்றோர் திருமணநாள் விழாவுக்கு பைக்கில் வந்த இளைஞர்.. கடைசி வரை வரவில்லை.. பெரும் சோகம்..!
டெல்லியில் திருமண நாள் கொண்டாட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தில், அதிகாரிகளின் மெத்தனத்தால் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. 
 
25 வயதான கமல் தியானி என்ற இளைஞர், தனது பெற்றோரின் திருமண நாளையொட்டி கேக் வெட்டுவதற்காக அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். "இன்னும் 15 நிமிடங்களில் வந்துவிடுவேன், அம்மாவிடம் சப்பாத்தி செய்ய சொல்லுங்கள்" என்று தனது இரட்டை சகோதரனிடம் கடைசியாக பேசியுள்ளார்.
 
ஆனால், அவர் வீடு வந்து சேரவில்லை. ஜனக்புரி பகுதியில் டெல்லி ஜல் போர்டு கழிவுநீர் திட்டத்திற்காக தோண்டியிருந்த 15 அடி ஆழமான பள்ளத்தில் கமல் தனது மோட்டார் சைக்கிளுடன் விழுந்து உயிரிழந்தார். அந்த பகுதியில் மின்விளக்குகள் இல்லாமலும், போதிய பாதுகாப்பு தடுப்புகள் வைக்கப்படாமலும் இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
 
தனது சொந்த சேமிப்பில் வாங்கிய பைக்கில் ஆசையாக பயணித்த கமலின் கனவுகள் அந்த பள்ளத்திலேயே புதைந்து போயின. அதிகாரிகள் மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தனது மகனுக்காக காத்திருந்த அந்த குடும்பத்தின் கொண்டாட்டம் ஆறா துயரமாக மாறியுள்ளது.
 
Edited by Siva