1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Man who announced beer drinking contest arrested

பீர் குடிக்கும் போட்டியை அறிவித்த நபர் கைது

Beer
புதுக்கோட்டையில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பீர் குடிக்கும் போட்டியை அறிவித்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.  

புதுக்கோட்டை மாவட்டம் கறம்மக்குடி தாலுகாவில் உள்ள வாணக்கன்காடு  என்ற ஊராட்சி பகுதியில், சமீபத்தில், பீர் குடிக்கும் போட்டி அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டியில்,60  நிமிடத்தில் ஒரு நபர் பத்து பீர் குடிக்க வேண்டும் என்றும் சைடிஷ் ஆக மீன் வருவல் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு, நுழைவு கட்டணம் 1000 ரூபாய் எனவும்,  36 பேர் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய இப்போட்டியில், முதல் பரிசு 5000 ரூபாய் என்றும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் உண்டு என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்த போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த பீர் குடிக்கும் போட்டி பற்றி போஸ்டரை சமூகவலைதளங்களில் வெளியிட்ட கணேசமூர்த்தி என்பவரை கைது செய்து போலீஸார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
ஆன்லைன் சூதாட்டத்தில் ஆசிரியர் தற்கொலை:தமிழக அரசு மேல்முறையீடு செய்ததா, இல்லையா?அன்புமணி