ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 6 ஏப்ரல் 2023 (16:18 IST)

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை

fisherman
இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 11 பேரை இன்று இலங்கை நாட்டு ஊர்க்காவல்துறை நீதிமன்ற நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ளது.

கடந்த மாதம் 22 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேரை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு இன்று இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எல்லை தாண்டி மீன்பிடித்தததாகக் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 12 மீனவர்களில் 11 பேரை நிபந்தனைகளுடன் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதில், ஒரு மீனவருக்கு மட்டும் 14 மாதம் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், அவர்களின் விசைப்படகுகள் அந்த நாட்டின் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.