திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 20 ஜனவரி 2020 (07:53 IST)

தலைப் பொங்கலன்று கொலை செய்யப்பட்ட புது மாப்பிள்ளை – காரணம் இதுதான் !

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளக்காதல் தகராறில் தலைப்பொங்கல் அன்று  புது மாப்பிள்ளை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காமராஜ் நகரில் வேன் ஓட்டுனராக பணிபுரிபவர் மாரிமுத்து. இவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து தனது தலைப் பொங்கலை புது மனைவியுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடியுள்ளார். ஆனால் அந்த சந்தோஷத்தைக் கெடுக்கும் வகையில் அவர் காணாமல் போயுள்ளார். ஊரே அவரைத் தேட அவர் ஏரிக்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது தலையில் ரத்தக்காயம் இருந்தது. யாரோ பாறாங்கல்லை அவர் மேல் போட்டுக் கொலை செய்திருந்தனர். இதையடுத்து போலிஸார் நடத்திய விசாரணையில் அவரைக் கொலை செய்தது மாரிமுத்து வசிக்கும் தெருவில் இருக்கும் தீர்த்த செல்வன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தீர்த்த செல்வன் ஒரு ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்த்த செல்வனின் மனைவிக்கும் மாரிமுத்துவுக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பு தான் இந்த கொலைக்குக் காரணமாக இருந்துள்ளது. அதை நிறுத்த சொல்லியும் கேட்காத மாரிமுத்துவை தீர்த்த செல்வன் தனது நண்பர்களுடன் சென்று கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.