புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 17 ஜனவரி 2020 (20:13 IST)

கணவனை கொலை செய்ய சொட்டு மருந்து பயன்படுத்திய மனைவிக்கு 25 ஆண்டுகள் சிறை!

கணவனை கொலை செய்ய சொட்டு மருந்தைப் பயன்படுத்திய மனைவி ஒருவருக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரர் ஸ்டீபன் என்பவரின் மனைவி தனது கணவர் கொடுமைப்படுத்தியதால் அவரை கொலை செய்ய முடிவு செய்தார். இதனை அடுத்து கண்ணுக்கு போடும் சொட்டு மருந்தை குடி தண்ணீரில் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார்
 
ஆனால் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சொட்டு மருந்தை குடி தண்ணீரில் கலந்தால் வயிற்றுப்போக்கு மட்டுமே ஏற்படும் என தான் நினைத்ததாகவும் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார் 
 
இருப்பினும் அவர் மீது கொலைக் குற்றத்திற்கான வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சொட்டு மருந்தின் மூலம் மனைவியே கணவரை கொலை செய்தது பிரேத பரிசோதனை மூலம் மட்டுமே தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது