1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: வெள்ளி, 17 ஜனவரி 2020 (16:32 IST)

பாலத்தின் மீது ஏறி... தற்கொலை செய்வதாக மிரட்டிய பெண்...

நவி மும்பையில் உள்ள வாஷி பாலத்தில் நின்று கொண்டிருந்த ஒரு இளம்பெண் திடீரென தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்ததால் அங்கு சற்று நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.
நவி மும்பையில் உள்ள  வாஷி என்ற பகுதியில் ஒரு பிரசித்தி பெற்ற பாலம் உள்ளது. இன்று காலை இந்தப் பாலத்திற்கு வந்த ஒரு இளம்பெண்,  தான் தற்கொலை செய்து கொல்லப்போவதாக அறிவித்தார்.
 
அதனால் மக்கள் அதிர்ச்சி  அடைந்து பின் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
 
இந்தக் தகவலை அடுத்து விரைந்து வந்த போலீஸார் பெண்ணுடன் பேசியவாறு அவர் அருகில் சென்று கீழே விழாதபடி பிடித்து அவரைக் காப்பாற்றினர்.
 
போலீஸாரால் மீட்கப்பட்ட பெண், பாத்திமா ஷேக் என்பது குறிப்பிடத்தக்கது.