செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 18 ஜனவரி 2020 (12:55 IST)

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது: ஜாமீனில் வந்து கொலை – உ.பியில் பயங்கரம்!

உத்தர பிரதேசத்தில் சிறுமி கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் வந்து சிறுமியின் தயை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு உத்தர பிரதேசம் கான்பூர் பகுதியை சேர்ந்த பெண் தனது 13 வயது மகளை 6 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சமீபத்தில் உள்ளூர் நீதிமன்றம் அவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

ஜாமீனில் வெளியே வந்த ஆறு பேரும் புகார் அளித்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அந்த பெண்ணையும், சிறுமியையும் வழக்கை திரும்ப பெறும்படி மிரட்டி இருக்கின்றனர். ஆனால் அதற்கு அவர்கள் மறுக்கவே அவர்களை கண்மூடித்தனமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர்.

சமீபத்தில் இதுபோன்ற பாலியல் வழக்கில் ஜாமீன் பெற்று வருபவர்கள் எதிர் தரப்பினரை தாக்கும், கொல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மக்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.