எஸ்.ஐ வில்சன் கொலையில் மூளையாக செயல்பட்ட நபர் கைது:

Last Modified வெள்ளி, 17 ஜனவரி 2020 (19:19 IST)
களியாக்கவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் மூளையாக செயல்பட்ட மெகபூப் பாஷா பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
களியாக்கவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் ஏற்கனவே கைதான அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த 3 பேர் தந்த தகவலின் பேரில் மெகபூப் பாஷாவை காவல்துறையினர் கைது செய்தாகவும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த கொலை வழக்கில் இன்னும் ஒருசில அதிரடி கைது நடவடிக்கை இருக்கும் என்றும், இந்த வழக்கு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்காக மட்டுமின்றி பல வழக்குகளுக்கு முடிவு கிடைக்கும் வகையில் இந்த வழக்கின் விசாரணை சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது
இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட நபரே கைது செய்யப்பட்டுள்ளதால் இவரிடம் நடத்தப்படும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :