ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 13 செப்டம்பர் 2021 (10:54 IST)

குடிபோதையில் மகனையே அடித்துக் கொன்ற தந்தை… உதவிய மற்றொரு மகன்!

பொள்ளாச்சி அருகே குடிபோதையில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மகன் உயிரிழந்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி ராமர்கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். இவருக்கும் இவர் மகன் செந்தில்குமாருக்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். அதில் கதிர்வேலின் இளைய மகனும் சேர்ந்தி செந்திலை தாக்கியுள்ளார்.

இருவரும் சேர்ந்து இரும்புக் கம்பியால் தாக்கியதில் செந்தில் மயக்கமடையவே அவரை தூக்கிச் சென்று பாலத்தின் அடியில் வீசிவிட்டு இருவரும் விபத்தில் அவர் மரணமடைந்துவிட்டதாக போலிஸாருக்கு தகவல் சொல்லியுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செந்தில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழக்கவே பிரேத பரிசோதனையில் உண்மை தெரியவந்துள்ளது. இதையடுத்து கதிர்வேலும் அவரின் இளைய மகனும் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.