வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 13 செப்டம்பர் 2021 (10:06 IST)

சோனி லிவ்வில் இருந்து விலகிய முன்னணி தயாரிப்பாளர்!

சோனி லிவ் ஓடிடி தளத்தின் பொறுப்பேற்று இருந்த முன்னணி தயாரிப்பாளர் தனஞ்செயன் இப்போது அதிலிருந்து விலகியுள்ளார்.

தமிழில் முன்னணி தயாரிப்பாளராகவும் சினிமா பயிற்சி கல்லூரியை நடத்தி வருபவருமான கோ தனஞ்செயன் சினிமா தயாரிப்புக் குறித்து அபாரமான திறமைக் கொண்டவர். இந்நிலையில் அவர் சில மாதங்களுக்கு தமிழில் கால்பதித்த சோனி லிவ் ஓடிடி தளத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஆனால் இப்போது அதிலிருந்து விலகி கொண்டார். மேலும் அவர் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் உரிமையாளர் ஞானவேல் ராஜாவின் தயாரிப்பு நிறுவனத்தில் தலைமைச் செயலதிகாரியாக சேர்ந்துள்ளாராம். அடுத்த சில ஆண்டுகளில் வரிசையாக படங்களை தயாரிக்க உள்ளார் ஞானவேல் ராஜா. அதை முன்னிட்டு அந்த படத்தின் எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டுள்ளார் தனஞ்செயன்.