முதல் மனைவி காசு கேட்டதால் இரண்டாவது மனைவியோடு சண்டை – கொலை செய்து தப்பியோடிய கணவன்!

Last Updated: வெள்ளி, 22 ஜனவரி 2021 (11:18 IST)

சென்னையில் இரண்டாவது மனைவியோடு ஏற்பட்ட சண்டை காரணமாக கணவரே அவரை இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ளார்.

சென்னையில் உள்ள ஆவடியை சேர்ந்த மதன் என்பவருக்கு அலமேலு என்ற மனைவியும் சங்கீதா என்ற மகளும் யாபேஸ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் மதனுக்கு சரிதா என்ற திருமணமான பெண்ணோடு திருமணம் தாண்டிய உறவு இருந்துள்ளது. இதனால் மதனின் மனைவியும் சரிதாவின் கணவரும் அவர்களைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளனர்.

இப்போது சரிதாவுக்கும் மதனுக்கும் 7 மாதக் குழந்தை ஒன்று உள்ளது. அதுமட்டுமில்லாமல் சரிதாவுக்கு முதல் திருமணம் மூலம் பிறந்த ஷாலினி என்ற 7 வயது குழந்தையும் அவர்களுடன் வசித்து வந்துள்ளார். இதற்கிடையில் முதல் மனைவி அலமேலு மதனுக்கு போன் செய்து குடும்ப செலவுக்கு பணம் கேட்டுள்ளார். இது சம்மந்தமாக மதனுக்கும் சரிதாவுக்கும் இடையே தகராறு ஏற்படவே கோபத்தில் மதனை அடித்துள்ளார் சரிதா. இதனால் கோபமான மதன் வீட்டில் இருந்த இரும்புக் கம்பியால் சரிதாவை தாக்க அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதை சரிதாவிடம் மகள் பார்த்து அங்கிருந்து தப்பி ஓடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீஸார் வந்து சரிதாவின் உடலைக் கைப்பற்றி தலைமறைவான மதனைக் கைக்குழந்தையோடு கைது செய்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :