1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Man killed his friend for wife

நண்பனின் வீட்டில் காமுகனின் லீலை – கொலையில் முடிந்த விபரீதம் !

மனைவி
கோப்புப் படம்

கோவில்பட்டி அருகே நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய நபர் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோவில்பட்டிக்கு அருகே உள்ள செட்டிக்குறிச்சி சாலைக்கு அருகேயுள்ள தோட்டத்தில் இரு தினங்களுக்கு முன்னதாக அழுகிய நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சடலத்தை அடையாளம் காணும் முயற்சியில் போலிஸார் இறங்கினர்.  விசாரணையில் உயிரிழந்தவர் கம்மாப்பட்டியை சேர்ந்த சித்தாள் வேலைப்பார்க்கும் மில்டன்ராஜ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவரைக் கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது உறவினர்கள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடைசியாக அவர் தன் செல்போனில் இருந்து விஜயன் என்ற கொத்தனார் நண்பருக்கு பேசிடிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விஜயனும் மில்டனும் ஒன்றாக வேலைப்பார்த்தவர்கள் என்பதாலும் நண்பர்கள் என்பதாலும் போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் திடுக்கிடும் பல தகவல்களை சொல்லியுள்ளார். மில்டனை தாம்தான் கொலை செய்ததாக ஒத்துக்கொண்ட அவர், , தன்னுடைய மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு தன்னைப் பணம் கேட்டு மில்டன் மிரட்டியதாகவும், அதனால் நண்பர்களுடன் சேர்ந்து அவரைக் கொலை செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து விஜயன் மற்றும் அவனது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
செந்தில்பாலாஜி ஒரு கொரோனா வைரஸ்! – வைகைசெல்வன் காட்டம்!