மனைவி சாக்சியை பங்கமாய் கலாயத்த தோனி: வைரலாகும் வீடியோ

தோனி மனைவி சாக்சி
Last Modified செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (08:00 IST)
தோனி மனைவி சாக்சி
இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்கள் மற்றும் ஃபாலோயர்கள் பெறுவதற்காக என்னை நீ வீடியோ எடுக்கின்றாயா? என தோனி தனது மனைவி சாக்சியை கலாய்த்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடருக்கு பின்னர் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடாத தோனி தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்த நிலையில் தோனியின் மனைவி சாக்சி பதிவு செய்யும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு அவர் போஸ் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் தோனி மனைவி சாக்சி வெளியிட்ட ஒரு வீடியோவில் ’இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை அதிகப்படுத்துவதற்காக என்னை வீடியோ இருக்கிறாயா? என்று கலாய்க்கின்றார். அதற்கு அருகில் உள்ள அவரது நண்பர்கள் சிரிக்கின்றனர். இதனை அடுத்து சாக்சி, ‘நானும் உங்களில் ஒரு பகுதிதானே, என்னுடைய ஃபாலோயர்ஸ்கள் உங்களை விரும்புகின்றார்கள் அதனால்தான் நான் வீடியோ இருக்கிறேன் என்று கூறுகிறார்

என்னுடைய ஃபாலோயர்ஸ்கள்
பலர் தோனி எங்கே என்று கேட்கிறார்கள்? உங்களை பார்க்க விரும்புகிறார்கள். எனவே தான் உங்களை வீடியோ எடுத்து பதிவு செய்கிறேன் என்று கூற அதனை கண்டுகொள்ளாமல் தோனி அந்த வீடியோவில் உள்ளார். தோனியின் கலாய்ப்பு மற்றும் சாக்சியின் கொஞ்சல் ஆகியவை அடங்கிய இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :