செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (09:11 IST)

செந்தில்பாலாஜி ஒரு கொரோனா வைரஸ்! – வைகைசெல்வன் காட்டம்!

Vaigai Selvan says Senthil Balaji as a Corona Virus

கரூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் கூட்டத்தில் செந்தில்பாலாஜியை கொரோனா வைரஸ் என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் பேசியுள்ளார்.

எம்.ஜி.ஆரின் 103வது பிறந்தநாள் பொதுகூட்டம் மாவட்டம்தோறும் அதிமுகவினரால் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று கரூரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும், செய்தி தொடர்பாளருமான வைகைசெல்வன் பேசியபோது ”நாடாளுமன்ற தேர்தலின்போது திமுக நகை கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி என போலியான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றினார்கள். உண்மையை புரிந்து கொண்ட மக்கள் இடைத்தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவை வெற்றிபெற செய்தார்கள்” என பேசினார்.

செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு நடைபெற்றது குறித்து பேசிய அவர் ”உறவினர்களோடு சேர்ந்து கொண்டு அரசுவேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதால் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார் கொரோனா வைரஸ் எனப்படும் செந்தில்பாலாஜி. சென்னையில் வீட்டையெல்லாம் சீல் வைத்துவிட்டார்கள். அதிமுகவின் சாபம் அவரை சும்மா விடாது” என்று கூறியுள்ளார்.