வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 18 நவம்பர் 2021 (20:02 IST)

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்த நபர் தற்கொலை

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 

சென்னை கிழக்கு தாம்பரம் அருகேயுள்ள சேலையூரில் வரைச் சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வவம் கொண்டிருந்த முருகன், சுமார் ரூ.20 லட்சத்திற்கு மேல் இழந்ததாகத் தெரிகிறது.

முருகனுக்குப் பணம் கொடுத்தவர்கள் பணத்தைத் திரும்ப்ப் கேட்ட்படி இருந்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த முருகன் இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்டு கொண்டார்.

அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.