ஜெய்பீம் படத்திற்கு விருதுகள் வழங்கக் கூடாது - வன்னியர் சங்கம் கண்டனம்
நடிகர் சூர்யா நடித்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பலரது பாராட்டுகளை பெற்றது.
அதேசமயம் இந்த படத்தின் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளதாக பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாமக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி, நடிகர் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன்” என தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதையடுத்து மிரட்டல் விடுத்த பழனிசாமி மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று ஜெய்பீம் படத்திற்கு எந்தவித விருதும் வழங்கக்கூடாது வன வன்னியர் சங்கம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்தக் கடிதம் மத்திய தகவல் மறும் ஒலிபரப்புத்துறைகு எழுதப்பட்டுள்ளது. மக்களிடையே வகுப்புவாத மோதல்கலை உருவகக்கும் அவதூறு காட்சிகளும் வசனங்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
எனவே இப்படத்திற்கு மத்திய அரசு எந்தவிதமான பாராட்டுகளையோ, விருதையே வழங்கு குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.