வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 18 நவம்பர் 2021 (18:28 IST)

இரட்டைக் குழந்தைக்கு தாயான நடிகை பிரீத்தி ஜிந்தா

பிரபல பாலிவுட் நடிகையும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான பிரீத்தி ஜிந்தா இன்று இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.

தில்ஷே உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் பிரீத்தி ஜிந்தா. இவர் அமெரிக்காவைச் சேர்ந்த  தன் நீண்டகால நண்பரான ஜீன் குடினஃப் என்
வபரை திருமணம் செய்துகொண்டார்.

இத்தம்பதிக்கு வாடகைத்தாய் மூலம் இன்று இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து பிரீத்தி ஜிந்தா’, எனது கணவரும் நானும், எல்லையில்லா மகிழ்ச்சியுடன் உள்ளதாக’’ தெரிவித்துள்ளார். அவருக்கு திரைத்துறையினரும், ரசிகர்கலும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.