1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2025 (09:33 IST)

தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சென்னை பெண்கள் விடுதியில் பரபரப்பு..!

தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சென்னை பெண்கள் விடுதியில் பரபரப்பு..!
சென்னையின் வேளச்சேரி பகுதியில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் அத்துமீறி நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சம்பவம் நடந்த அன்று இரவு நேரத்தில், வேளச்சேரியில் உள்ள தனியார் பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த அந்த இளைஞர், அறையில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண் அலறியதால், அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
 
இந்த சம்பவம் குறித்து வேளச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பாலியல் தொல்லை கொடுத்தவர் வேளச்சேரி பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பது தெரிய வந்தது.
 
காவல்துறையினர் லட்சுமணனை கைது செய்து விசாரணை செய்ததில், அவர் இதேபோன்று வேறு பல பெண்கள் விடுதிகளிலும் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லைகளில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Siva