கட்சிக்கு நிதி சேர்க்கும் கமல் – சிறப்பு உறுப்பினர் பதிவு !
கமல் தனது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நிதி திரட்டும் விதமாக சிறப்பு உறுப்பினர் சேர்க்கையை அறிமுகப்படுத்தியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளைப் பெற்றது அக்கட்சியினருக்குப் புத்துணர்ச்சியை அளித்துள்ளது. இதையடுத்து அடுத்தகட்டமாக தேர்தலை சிறப்பாக எதிர்கொள்வதற்காக தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரோடு மக்கள் நீதி மய்யம் இணைந்து செயல்பட்டு வருகிறது.
சிறப்பாக செயலப்ட்டு வரும் கட்சிக்கு பெரிய தலைவலியாக இருப்பது நிதிப்பற்றாக்குறைதான் என சொல்லப்படுகிறது. அதனால் கட்சிக்கு நிதி சேர்க்கும் பொருட்டு சிறப்பு உறுப்பினர்கள் சேர்க்கை என்ற புதிய முறையை அமல்படுத்தியுள்ளனர். சிறப்பு உறுப்பினராக சேருபவர்கள் கட்சிக்காக ரூ 500 ஐ நிதியாகக் கொடுக்க வேண்டும். இப்படி குறைந்தபட்சம் 20 உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.