செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (14:54 IST)

’ஈசா யோக மையம் ’நிறுவனரின் திட்டத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு ..

காவிரி நதியை மீட்க வேண்டும் என்பதற்காக ஈஷா யோக மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிவரை தலைகாரிவியில் இருந்து திருவாரூர் வரை மோட்டார் பயணம் மேற்கொள்ள உள்ளதாக  தகவல் வெளியானது.இந்நிலையில் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு கமல்ஹாசமன் சத்குருவுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவரது 'நதிகளை மீட்போம்' திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில், தமிழ்மாறன் ( ஈஷா வேளாண் காடுகள் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளார் ) கூறியதாவது :
 
ஈஷா யோக மையத்தின் நிறுவனர் ஜக்கிவாசுதேவ் நதிகளை மீட்போம் , காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்த இயக்கம் தென்னிந்தியாவில் உயிர்நாடியாக உள்ள காவிரியை மீட்கவும்,  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் வகையில் இருக்கும். இந்நிலையில் தமிழக கர்நாடக மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்புடன் காவிரி நதியை மீட்க வேண்டி, சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைக்காவிரில் தொடங்கி தன்  திருவாரூர் வரைக்குமார் சுமார் 1200 கி.மீ பயணத்தை மோட்டார் சைக்கிளில் சென்று மக்களை சந்திக்க இருக்குறார். இப்பயணமானது செப்டம்பர் 3 ஆம் தேதிமுதல் 15 ஆம் தேதிவரையிலும் நடைபெறும் என்று தெரிவித்தார். 
 
இந்நிலையில் இன்று தனது பிறந்தாளை முன்னிட்டு நதிகளை மீட்போம் திட்டத்தை ஈஷா யோக மையம் நிறுவன ஜக்கி வாசுதேவ் தலைக்காவிரியில் இருந்து மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்குகிறார்.
 
இதுகுறித்து நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹ்சான் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :
 
சமூகத்தில் நிலவுகிற மதம், அசியல் வேற்றுமைகளைக் கடந்த கடந்த ஒரு விஷயமாக  ஈஷா யோக மையம் நிறுவனரின் இந்த நதிகள் மீட்பு பயணம் இருக்கும்.  இதை நான்  ஆதரிப்பதற்கான  பொதுக்காரணம் உலகைக் காப்பதுதான் . சத்குருவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் . இந்த பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.