வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ்கியான்
Last Updated : புதன், 4 செப்டம்பர் 2019 (14:23 IST)

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ’ஐஸ்’ வைக்கிறாரா கராத்தே தியாகராஜன் ...

தமிழகத்தில்  வெற்றிடம் நிலவுவதாக கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அதன்பின்னர் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் பலத்த வெற்றி பெற்றன.  ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு   இதில் மக்களவை தேர்தல் உள்பட இடைத்தேர்தலிலும்  மிகக் குறைவான  இடங்களில்தான்  வெற்றிபெற்றன.
 

இதனையடுத்து  வெற்றிடம் என்று குரலெழுப்பியவர்கள் ,திமுக தலைவர் ஸ்டாலினின் எழுச்சியை கண்டு திகைத்தனர். பின்னர் சென்ற வருடத்தில் கட்சி தொடங்கி மக்களவைத் தேர்தலில் சுமூகமான வாக்குகள் பெற்றிருந்த கமல்ஹாசனும் முன்னர் போன்று ஸ்டாலினை விமர்சிக்கவில்லை. ஆனால் ஆளும்கட்சிகளை வசைபாடி அவர்களின் நடவடிக்கைகளை விமர்சித்தார். அவரை போன்று சில கட்சித் தலைவர்கள் இன்னமும் ஆளுங்கட்சியினரை விமர்சித்துவருகின்றனர்.

ஆனால் மக்கள் இந்த மூன்றரை ஆண்டுகளாய் முதல்வர் எடப்பாடி தலைமையிலான ஆட்சியை ஏற்றுக்கொண்டனர் என்பது தானே உண்மை. அவர்களிடம் ஆட்சி திருப்தியா ? இல்லையா ? என்பது குறித்த பதில் அடுத்த தேர்தல் எனும் வினாத்தாளில் மக்களின் ஓட்டு விடையாகப் பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கிடையில்  தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வெற்றிடத்தை ரஜினி தான் நிரப்புவார் என்று காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் அரசியல் வருகையை யாரும் கணிக்கவில்லை. ஏன் நடிகர் ரஜினிகாந்த் கூட  அதை கணிக்க,தேதி குறிக்க நேரம் இல்லாமல் தர்பார் படத்தில் படுபிசியாய்  போஸ்  கொடுத்து  நடித்து  வருகிறார்.

இந்நிலையில் கராத்தே தியாகராஜனோ, வரும் மார்ச் மாதத்திற்குள் ரஜினி கட்சி தொடங்குவார் என தெரிவித்துள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் உள்ள இவர், அக்கூட்டணி கட்சியின் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை பற்றி கேள்விகேட்டது, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மீது குற்றம் சுமத்தியது, ரஜினியின் அரசியல் வருகையை எதிர்பார்த்து, காத்து அவரது ஆளுமையை நம்பியிருப்பது  போன்றவற்றை பார்க்கும் போது இவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஒருவேளை ரஜினி தொடங்கவுள்ள ஆன்மிக அரசியல் பாதையில் செல்லவுள்ள கட்சியில் தன்னை இணைத்துக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. அதற்காகத்தான் இவர் இப்போதிலிருந்து ’ஐஸ்’ வைத்துவருகிறார்  என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துவருகிறார்கள்.