ஊரடங்கிற்கு ஒத்துழைத்த பாலியல் தொழிலாளிகள்! – நிவாரணம் அளித்த அரசு!
மகாராஷ்டிராவில் உள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு கொரோனா கால நிவாரணமாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்குவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள பெண் பாலியல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் நிவாரண உதவியாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்குவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கூறியுள்ள மகாராஷ்டிரா பெண்கள் மற்றும் குழந்தைகள் நல துறை அமைச்சர் யசோமதி தாக்கூர் ”பாலியல் தொழிலாளர்களுக்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களுக்கு மாதம் தலா ரூ.5 ஆயிரம் என கணக்கிட்டு நிவாரணமாக வழங்கப்படும், பள்ளி செல்லும் குழந்தைகள் இருந்தால் ரூ.2500 கூடுதலாக வழங்கப்படும்” என கூறியுள்ளார்.