வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2020 (09:02 IST)

விவசாயிகள எல்லையிலயே தடுக்கணும்; சலோ டெல்லி பேரணிக்கு எதிராக போலீஸ் குவிப்பு!

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தடுப்பதற்காக நெடுஞ்சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் விவசாய மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் பஞ்சாப், ஹரியானா பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தலைநகர் டெல்லியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டக்காரர்களை போலீஸார் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லிக்கு போராட்டக்காரர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் டெல்லி – ஹரியான தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் உள்ளே வர முடியாத படி எல்லைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் பஞ்சாப், ஹரியானா, டெல்லி ஆகிய பகுதிகள் பரபரப்புடன் காணப்படுகிறது.