ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2020 (11:42 IST)

இறந்த சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் நாய்! வைரலான வீடியோவால் அதிர்ச்சி!

உத்தர பிரதேசத்தில் மருத்துவமனையில் இருந்த சிறுமியின் உடலை நாய் கடித்து இழுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் சம்பால் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் சாலை விபத்தில் சிக்கியுள்ளார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய இருந்த நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் உடலை கூறாய்வு செய்யாமல் ஒப்படைக்க வேண்டுமென கேட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் சிறுமியின் உடல் மருத்துவமனை வளாகத்தின் வெளியே ஸ்ட்ரெச்சரில் வைக்கப்பட்டிருந்துள்ளது. அப்போது அவ்வழியாக சென்ற தெருநாய் ஒன்று சிறுமியின் உடலை ஸ்ட்ரெச்சரிலிருந்து கடித்து இழுத்து செல்ல முயன்றுள்ளது. இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில், இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம் வார்டு பாய், செவிலியர் உட்பட சிலரை டிஸ்மிஸ் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.