வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2020 (08:17 IST)

இந்திய வரலாற்றில் முதன்முறையாக… பொங்கலுக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை எதிர்வரும் ஜனவரியில் கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தை 1 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மற்ற பண்டிகைகளை போல பொங்கல் பண்டிகைக்கும் தேசிய அளவிலான பண்டிகை அங்கீகாரம் அளிக்க வேண்டுமென தமிழ் ஆர்வலர்கள் பலரும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் 2021 ஜனவரி 14 பொங்கல் தினத்தன்று உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்காக உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவது வரலாற்றிலேயே இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பொங்கல் விழாவிற்கு தேசிய பண்டிகை அங்கீகாரம் அளிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.