வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 27 செப்டம்பர் 2021 (09:40 IST)

மதுரையில் பிளஸ் 2 மாணவர் திடீர் தற்கொலை: என்ன காரணம்?

மதுரையில் பிளஸ் டூ மாணவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீட் தேர்வு எழுதிய பிளஸ் டூ மாணவர்கள் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் நீங்காத நிலையில் மதுரையில் பிளஸ்டூ படித்து வரும் மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்
 
மதுரையில் செல்போனில் பிளஸ்டூ மாணவன் பிரான்சிஸ் என்பவர் விளையாடுவதை அவரது தாய் முத்துமாரி என்பவர் கண்டித்துள்ளார். தாய் கண்டித்ததால் மனமுடைந்த அந்த மாணவர் உடனடியாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். செல்போனில் தொடர்ந்து விளையாடி வந்ததை தாய் முத்துமாரி கண்டித்ததால் மாணவர் விபரீத முடிவு எடுத்துள்ளது அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். செல்போன் விளையாட்டில் மாணவர்கள் அடிமையாகக் கூடாது என்றும் மாணவர்கள் செல்போன் விளையாடுவதை பெற்றோர்கள் இதமாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்