1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. School student committed suicide in chennai

மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை… அடையாளம் கான்பதில் ஏற்பட்ட சிக்கல்!

பள்ளி மாணவி
சென்னை கொரட்டூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் 16 ஆவது மாடியில் இருந்து 11 ஆம் வகுப்பு மாணவி விழுந்து தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொரட்டூர் வாட்டர் கேனால் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 16 ஆவது மாடியில் இருந்து ஒரு மாணவி கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது சம்மந்தமாக் போலிஸாருக்கு தகவல் செல்ல அவர்கள் சிறுமியின் உடலை மீட்டுள்ளனர். அந்த சிறுமி பற்றி விசாரித்ததில் அந்த அபார்ட்மெண்ட் வாசிகள் சிறுமியை யாரென்று தெரியவில்லை எனக் கூறியுள்ளனர்.

சீருடை மற்றும் பள்ளி பை ஆகியவற்றை வைத்து மாணவி எனக் கண்டுபிடித்த போலிஸார், பையில் இருந்து அவர் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த வைஜெயந்தி என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அவரது பெற்றோருக்கு தகவல் சொல்லி வரவழைத்துள்ளனர்.

இதையடுத்து நடந்த விசாரணையில் பள்ளியில் சரியாக பாடம் கவனிக்காமலும் படிப்பில் கவனம் செலுத்தாமலும் இருந்ததால் ஆசிரியர்கள் கண்டித்ததாகவும், அதனால் பயந்து இந்த முடிவை எடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
நிதி நிறுவனம் கொடுத்த அழுத்தம்… மாற்றுத்திறனாளி விவசாயி தற்கொலை – ராமதாஸ் கண்டனம்!