வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 25 செப்டம்பர் 2021 (10:58 IST)

தாம்பரத்தில் கல்லூரி வெளியே மாணவியைக் கொன்ற இளைஞன்… தானும் தற்கொலைக்கு முயற்சி!

சென்னை தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரிக்கு வெளியே கத்தியால் குத்தி மாணவியைக் கொலை செய்துள்ளார் இளைஞர் ஒருவர்.

சென்னை குரோம்பேட்டை ராதாநகரைச் சேர்ந்தவர் சுவேதா. இவர் தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துவக் கல்லூரியில் ஆய்வக உதவியாளர் படிப்பு படித்து வருகிறார். இவருக்கும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கும் பேருந்து பயணம் ஒன்றில் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து சுவேதாவை பார்க்கவேண்டும் என்பதற்காக சென்னைக்கே மாறி வந்துள்ளார் ராமச்சந்திரன். ஆனால் இவர்களின் காதல் விவகாரம் ஸ்வேதாவின் வீட்டுக்கு தெரிந்ததால் அவரைக் கண்டித்துள்ளனர். இதனால் ஸ்வேதாவும் ராமச்சந்திரனின் காதலை ப்ரேக் அப் செய்து முடிவு செய்து அவரிடமே சொல்லியுள்ளார்.

இது சம்மந்தமாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ஸ்வேதாவை பார்க்க வந்த ராமச்சந்திரன் கல்லூரிக்கு வெளியே அவரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் திடீரென கத்தியை எடுத்து ஸ்வேதாவின் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் அவரும் தன் கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளார்.

இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் ஸ்வேதா உயிரிழந்துள்ளார். ராமச்சந்திரன் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.