1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (15:14 IST)

20 ஆண்டுகள் அரியர் வைத்திருக்கும் மாணவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு வாய்ப்பு!

20 ஆண்டுகள் அரியர் வயது உள்ள பிஈ மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குவது குறித்த அறிவிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
 
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரியர் வைத்துள்ள பொறியியல் மாணவர்கள் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் செமஸ்டர் தேர்வில் விண்ணப்பித்து தங்களது அரியரை பூர்த்தி செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது
 
மேலும் தங்களது அரியரை முடிக்க முடிக்க விரும்பும் மாணவர்கள் www.coe1.annauniv.edu  என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்துடன் கூடுதலாக ரூபாய் 5000 செலுத்த வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது