1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Madurai Medical students suffered from corona

மருத்துவ கல்லூரி மாணவிகள் 5 பேருக்கு கொரோனா! – மதுரையில் பரபரப்பு!

Tamilnadu
தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் மதுரை மருத்துவ கல்லூரி மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது தளர்வுகள் காரணமாக பள்ளிகள் 9 முதல் 12 வகுப்புகளுக்கு திறக்கப்பட்டுள்ளன. அதேபோல தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மதுரை மருத்துவ கல்லூரியில் படித்து வரும் 5 மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் சமீப காலமாக மாணவ, மாணவியர் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
நிலம் இல்லா ஏழைகளுக்கு நிலம் - தமிழக அரசு அதிரடி