செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (11:15 IST)

வைரல் ஹிட் ஆன பேர் வச்சாலும் ரீமிக்ஸ் பாடல்! இளையராஜா சொன்ன ருசிகர தகவல்!

இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த பேர் வச்சாலும் பாடல் சமீபத்தில் அவர் மகன் யுவன் ஷங்கர் ராஜாவால் ரீமிக்ஸ் செய்யப்பட்டது.

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற பேரு வச்சாலும் என்ற பாடல் சமீபத்தில் சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்த டிக்கிலோனா படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டது. அதே பாடகர்களின் குரலோடு சின்ன சின்ன மாற்றங்கள் மட்டும் செய்து அந்த பாடலை மெருகேற்றினார் யுவன் ஷங்கர் ராஜா.


இந்த பாடல் இப்போது இணையத்தில் வைரலாக ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த பாடல் உருவான விதம் குறித்து இளையராஜா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ‘இந்த பாடலை உருவாக்கும் போது வாலியிடம் மெட்டை சொன்னபோது ‘என்னய்யா மெட்டு இது? இதற்கு எப்படி பாடல் எழுதுவது?’ எனக் கேட்டார். நான் ஏற்கனவே வள்ளுவர் எழுதி இருக்கிறாரே என்று கூறியதும் அனைவரும் ஆச்சர்யமாக பார்த்தனர்.

அப்போது நான் அந்த மெட்டுக்கு துப்பார்க்கு துப்பாய என்ற குறளை பாடிக் காட்டினேன். அதைக் கேட்டு புரிந்துகொண்ட வாலி உடனடியாக இந்த பாடலை எழுதிக்கொடுத்தார்’ எனக் கூறியுள்ளார்.