திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (11:20 IST)

நிர்வாணக் கோலத்தில் அழிச்சாட்யம் செய்த போக்குவரத்து காவலர்… வைரலாகும் வீடியோ!

சென்னை அம்பத்தூரில் குடிபோதையில் போக்குவரத்து காவலர் ஒருவர் ஆபாசமாக நடந்துகொண்டது அருவருப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணகுமார் கோயம்பேட்டில் போக்குவரத்து காவலராக பணியாற்றுகிறார். இந்நிலையில் அவரது வசிப்பிடத்தில் அருகில் வசிக்கும் முருகன் என்ற காய்கறி வியாபாரிக்கும் அவருக்கும் இடையே வாகனம் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இது சம்மந்தமாக முருகன் இல்லாத போது கிருஷ்ணகுமார் போதையில் அவர் வீட்டுக்கு சென்று சண்டை போட்டுள்ளார். அப்போது அவரை அனைவரும் சமாதானப்படுத்த வீட்டுக்கு செல்லாமல் தனது கால்சட்டையை கழட்டி நிர்வாணமாக நின்று கெட்ட வார்த்தைகளை பேச தொடங்கியுள்ளார்.

இதைப் பார்த்த பெண்கள் அருவருப்போடு அங்கிருந்து நகர்ந்துள்ளனர். இது சம்மந்தமாக போலீஸுக்கு முருகன் புகார் கொடுத்துள்ளார். மேலும் கிருஷ்ணகுமாரின் ஆபாசமான செய்கைகள் அடங்கிய வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.