1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 10 பிப்ரவரி 2022 (11:13 IST)

மாரிதாஸ் மீது திமுக தொடர்ந்த வழக்கு ரத்து: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

தூத்துக்குடி நீதிமன்றத்தில் மாரிதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்வதாக மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திமுக மீது அவதூறு பரப்பியதாக மாரிதாஸ் மீது திமுக தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த சில நாட்களாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கை ரத்து செய்வதாக உத்தரவிட்டார். இதனையடுத்து மாரிதாஸ் தரப்பினர் இந்த உத்தரவை கொண்டாடி வருகின்றனர்
 
ஏற்கனவே குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான வழக்கில் இருந்து விடுபட்ட மாரிதாஸ், தற்போது இந்த வழக்கில் இருந்தும் விடுபட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது