ஹிஜாப் அணியலாமா? கூடாதா? கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு!
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது
இந்த விசாரணையின்போது மாணவிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மற்றும் அரசு வழக்கறிஞரும் தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைத்தனர். இதனை அடுத்து இந்த விவகாரத்தில் உணர்வுபூர்வமாகவும் மதத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க முடியாது என்றும் சட்டத்தின்படி தான் தீர்ப்பு வழங்க முடியும் என்று சட்டம் எனக்கு பகவத் கீதை போதும் என்றும் நீதிபதி தெரிவித்தார்
மேலும் இன்று இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்யப்பட்டு அதன் பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது