1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (08:49 IST)

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரிப்பதை எதிர்த்து மேல்முறையீடு

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரிப்பதை எதிர்த்து மேல்முறையீடு
தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என சமீபத்தில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது என்பது தெரிந்ததே
 
இந்தநிலையில் மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க மதுரை ஐகோர்ட் கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பள்ளி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது 
 
இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.