1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

ஹிஜாப் வழக்கு: 3 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரணை

கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் சிலர் திடீரென ஹிஜாப் அணிந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மாணவிகளை கல்லூரி நிர்வாகம் அனுமதிக்காததை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் இது குறித்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது கர்நாடக மாநில அரசின் சீருடை திட்டத்தை திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும் இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிப்பார்கள் என்று அறிவித்திருந்தார்
 
இந்த நிலையில் கர்நாடகாவில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய வழக்கில் இன்று மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணை செய்கிறது. இன்றைய விசாரணைக்கு பின்னர் ஹிஜாப் அணியும் விவகாரத்தில் முக்கிய தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது