பனையூர் வர நான் ரெடி.. அவங்கள விட்டுருங்க.. விஜய்க்கு சவால் விட்ட ஜூலி
விஜயின் வேலூர் பரப்புரைக்கு அடுத்து பிக்பாஸ் ஜூலி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் விஜய் பேசிய கருத்துக்கு அவர் எதிர்வினையாற்றியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் சார்ந்த ரசிகர்கள் மற்றும் டிவி பிரபலங்கள் என தொடர்ந்து ஜூலியை திட்டினார்கள். இதனால் மறுபடியும் ஜூலி ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் விஜய்க்கு சவால் விடுவது மாதிரி பேசியிருக்கிறார். இதோ அவர் பேசியது:
விஜய் அண்ணா.. உங்க வேலூர் பரப்புரையை பார்த்து அதில் எதுவும் இல்லை என்கிற ஆதங்கத்தில் ஒரு வீடியோ போட்டு இருந்தேன். உங்களுடைய ரசிகர்கள், ஆமாம் அவர்கள் வெறும் ரசிகர்கள் தான். ஏனெனில் இன்னும் அரசியல்வயப்படவில்லையே. அவர்கள் என்னை எல்லா சோசியல் மீடியா தளத்திலும் கடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மைனர் பசங்க கிட்ட இருக்கிறது முக்கால்வாசி ஃபேக் ப்ரொபைல் மட்டும்தான்.
அதை வைத்து தான் என்னை மிரட்டி கொண்டும் இருக்கிறார்கள். அதுக்காக பயந்து நான் அந்த வீடியோவை டெலிட் செய்யவும் மாட்டேன் .என் கருத்துக்களில் இருந்து பின்வாங்கவும் மாட்டேன். என்னை மிரட்டினால் பரவாயில்லை. என்னை சுற்றி உள்ளவர்களையும் மிரட்டுகிறார்கள். அதனால் இதை நான் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். விஜய் அண்ணா.. உங்களுக்கு என்னை பழிவாங்க வேண்டும் என்றால் நான் என் வீட்டில் இருப்பேன். இல்லையென்றால் என் ஆஃபீஸில் இருப்பேன்.
என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுங்கள். ஆனால் அவர்களை விட்டு விடுங்கள். ஓ... நீங்க பனையூரை விட்டு வெளியில் வர மாட்டீங்க இல்லையா? நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். நான் வேண்டுமென்றால் பனையூர் வருகிறேன். என்னை திட்டினால் என்னை திட்டின மாதிரி தான் .மக்களை திட்டுவது மாதிரி என்று யாரையும் உள்ளே இழுத்து போட மாட்டேன்.
ஒரு பெண்ணுக்கு சோசியல் மீடியாவில் முக்கியமாக எவ்வளவு மரியாதையும் எவ்வளவு மதிப்பும் எவ்வளவு பாதுகாப்பும் உங்கள் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது என்பதை அந்த வீடியோ கீழ் இருக்கிற கமெண்ட் செக்ஷனை நேரம் இருந்தால் படித்து பாருங்கள் நன்றி அண்ணா என ஜூலி விஜய்க்கு சவால் விடுவது மாதிரி பேசி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.